யோகி பாபு தொடர்பில் இயக்குனர் பரபரப்பு குற்றச்சாட்டு
3 மார்கழி 2025 புதன் 13:40 | பார்வைகள் : 449
விஜய் விஷ்வா, சாக் ஷிஅகர்வால் நடித்த சாரா படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் காமெடியனாக யோகிபாபு நடிக்கிறார். ரஜித் கண்ணா இயக்கி, படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு யோகிபாபு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில் 'இந்த படத்தில் யோகிபாபு காமெடியனாக நடித்துள்ளார். அவருக்கு எந்த சம்பள பாக்கியும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் சம்பளத்தை முன்பே வாங்கிக் கொள்கிறார். ஒரு நாளைக்கு 10 லட்சம் சம்பளம் என்ற விதம், 5 நாட்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே சம்பளம் கொடுத்தால்தான் படப்பிடிப்பு வருகிறார். தினமும் அவர் குழுவுக்கு பேட்டா கொடுக்க வேண்டும். படப்பிடிப்பு சமயத்தில் அதை மதியமே வாங்கிக் கொள்வார்கள். ஆனால், பின்னர் போன் எடுப்பதில்லை'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அதேசமயம் இந்த படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின், முக்கிய வேடத்தில் நடித்த பொன் வண்ணன், அம்மாவாக நடித்த அம்பிகாவும் பட பிரமோஷன்களில் கலந்து கொள்ளவில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan