நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி..
2 மார்கழி 2025 செவ்வாய் 16:20 | பார்வைகள் : 113
விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை கெமி, தற்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இரு புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கூடைப்பந்தாட்ட வீராங்கனை மற்றும் நடிகையான இவர், இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கும் 'மை லார்ட்' படத்தில் வில்லி கேரக்ட்ரில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, டிசம்பர் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜின் உதவியாளர் விஷ்ணு எடவன் இயக்கும் 'ஹாய்' படத்திலும் கெமி நடிக்கிறார். இதில் நடிகர் கவின் மற்றும் நடிகை நயன்தாரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
கவின் மற்றும் நயன்தாரா இருவரும் தனக்கு நடிக்க உதவியதாகவும், அவர்களுடன் நடித்த அனுபவம் சிறப்பானதாகவும் கெமி குறிப்பிட்டுள்ளார். பிக் பாஸ் மூலம் பிரபலமான கெமிக்கு கிடைத்த இந்த அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan