உலகின் முதல் Self-Charging செய்யும் சோலார் மோட்டார் சைக்கிள் SOLARIS அறிமுகம்
30 கார்த்திகை 2025 ஞாயிறு 14:56 | பார்வைகள் : 668
உலகின் முதல் Self-Charging செய்யும் சோலார் மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
MASK Architects நிறுவனம், SOLARIS எனப்படும் உலகின் முதல் முழுமையான சூரிய ஆற்றல் மூலம் இயங்கும், சுயமாக சார்ஜ் செய்யும் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது, மின்சார வாகனங்கள் சார்ஜிங் நிலையங்கள் அல்லது எரிபொருள் சார்ந்த கட்டமைப்புகளின் மீது சார்ந்திருக்கும் நிலையை முற்றிலும் மாற்றும் புதிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
SOLARIS முக்கிய அம்சங்கள்
SOLARIS மோட்டார் சைக்கிள், சூரிய ஒளியை சேகரிக்கும் மடிக்கக்கூடிய சோலார் பேனல்கள் (photovoltaic wings) கொண்டுள்ளது.
இவை வாகனம் நிறுத்தப்பட்டபோது விரிந்து, சூரிய ஒளியை சேகரித்து, உயர் திறன் கொண்ட லித்தியம் பேட்டரியில் சேமிக்கின்றன.
இந்த பைக் தானே தனது சார்ஜிங் நிலையமாக மாறுகிறது.
High-torque electric motor, regenerative braking, lightweight aluminum-carbon composite chassis ஆகியவை வாகனத்தின் செயல்திறனை அதிகரிக்கின்றன.
Digital cockpit மற்றும் app connectivity மூலம் நேரடி தரவுகளை பயணிகள் அறியலாம்.
இந்த மோட்டார் சைக்கிளின் வடிவமைப்பு, சிறுத்தையின் உடல் அமைப்பை பிரதிபலிக்கிறது. நீளமான முன் பகுதி, தசைமிகு கட்டமைப்பு, முன்னோக்கி பாயும் நிலை ஆகியவை aerodynamics மற்றும் ரைடர் அனுபவத்தை மேம்படுத்துகின்றன.
பயன்கள்
முழுமையான சூரிய ஆற்றல் சார்ந்ததால், பூஜ்ய எரிபொருள் செலவு.
தொலைதூர பகுதிகள், சுற்றுலா, இயற்கை பாதுகாப்பு மண்டலங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்த ஏற்றது.
குறைந்த பராமரிப்பு செலவுடன், விரைவான payback period வழங்கும்.
‘SOLARIS’ மோட்டார் சைக்கிள், உலகளாவிய போக்குவரத்து துறையில் solar-autonomous motorcycle எனும் புதிய வகையை உருவாக்குகிறது.
இது, எரிபொருள் அல்லது மின்சார வலையமைப்புகளின் மீது சார்ந்திராமல், பயணிகள் தங்களுக்கே உரிய சுத்தமான ஆற்றலை உருவாக்கும் எதிர்காலத்தை சுட்டிக்காட்டுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan