ஐபிஎல் கிரிக்கெட்டில் திடீர் ஓய்வு! அதிர்ச்சி கொடுத்த ரஸல்...
30 கார்த்திகை 2025 ஞாயிறு 13:56 | பார்வைகள் : 2280
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வந்த ஆந்த்ரே ரஸல், ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அடுத்த சீஸன், 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரரான ஆந்த்ரே ரஸல், ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வந்த ரஸல், பல போட்டிகளில் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.
துடுப்பாட்டத்தில் சிக்ஸர்களை பறக்கவிடும் ரஸல், பந்துவீச்சிலும் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய வல்லமை கொண்டவர்.
அது மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கில் அசத்தி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்துபவர்தான் ஆந்த்ரே ரஸல் (Andre Russell).
அவரது இந்த அறிவிப்பு கொல்கத்தா அணியின் ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களையும் அதிர்ச்சியிலும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
எனினும், 2026 சீசனில் கொல்கத்தா அணியின் Power Coach ஆக செயல்படவுள்ளதாகவும், உலகின் பல்வேறு தொடர்களில் தொடர்ந்து விளையாடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆந்த்ரே ரஸல் இதுவரை 139 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2651 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 12 அரைசதங்கள் மற்றும் 223 சிக்ஸர்கள் அடங்கும்.
அதேபோல் பந்துவீச்சில் 123 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் சிறந்த பந்துவீச்சு 5/15 ஆகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire