லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படத்தில் அல்லு அர்ஜுன்?
28 கார்த்திகை 2025 வெள்ளி 12:54 | பார்வைகள் : 2130
'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு தமிழ் இயக்குனரான அட்லி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். பிரம்மாண்டமான பொருட் செலவில் அப்படம் தயாராகி வருகிறது. அடுத்த வருடம் இப்படம் வெளியாகுமா அல்லது 2027ல் வெளியாகுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
இந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் தமிழ் இயக்குனருடன் அல்லு அர்ஜுன் கூட்டணி வைக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள அந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம்.
'கூலி' படத்தை எதிர்பார்த்த அளவிற்கு லோகேஷ் தரவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. அதனால், ரஜினி, கமல் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்காது என்றார்கள். என்றாலும், 'கூலி' படத்தில் வாங்கியதை விட கூடுதல் சம்பளத்துடன் அவரை ஒப்பந்தம் செய்ய சில தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளார்களாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan