ரஜினியுடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி
26 கார்த்திகை 2025 புதன் 14:32 | பார்வைகள் : 1895
விஜய் சேதுபதி தென்னிந்திய திரை உலகில் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும், கேமியோ ரோல்களிலும் நடித்து தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தது சிம்புவின் ‘அரசன்’ படத்தில் இணைய இருக்கிறார். இந்நிலையில் ‘பேட்ட’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி, ரஜினியுடன் இணைந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
விஜய் சேதுபதி, ரஜினியுடன் மீண்டும் இணையப்போகும் தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்திருக்கும் நிலையில், அவர் எந்த படத்தில் ரஜினியுடன் நடிக்கப் போகிறார் என்பது தான் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. ஏனென்றால் விஜய் சேதுபதி, ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறாராம். அதற்காக தற்போது கோவாவில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஏற்கனவே பல பிரபலங்கள் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருவதாக தகவல் கசிந்து வருகிறது. அதே சமயம் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் நடிப்பதாக வெளிவந்துள்ள தகவல் ‘ஜெயிலர் 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி உள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
ஜெயிலர் 2 படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படம் ரஜினியின் 172-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan