ஆசிரியர்கள் சொந்த பணத்தில் கல்வி செலவுகள் செய்வதால் விரக்தி!!
15 மார்கழி 2025 திங்கள் 08:00 | பார்வைகள் : 1754
பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் வகுப்புகளுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் கூடுதல் கற்பித்தல் வளங்களை சொந்த பணத்தில் வாங்கி வருகின்றனர்.
2025 ஜனவரியில் வெளியான ஒரு கருத்துக்கணிப்பின் படி, மழலை மற்றும் தொடக்க நிலை ஆசிரியர்கள் ஆண்டுக்கு சராசரியாக 300 யூரோக்களும், சிலர் கிட்டத்தட்ட 500 யூரோக்கள் வரையும் செலவிடுகின்றனர். இந்தச் செலவுகள் பாடசாலையால் ஈடு செய்யப்படாததால், ஆசிரியர்களின் தனிப்பட்ட பொருளாதாரத்தில் பெரும் சுமையாக மாறியுள்ளன.
பல ஆசிரியர்கள், தங்கள் பணிக்காக செலவிடும் இந்தப் பணம் இயல்பான ஒன்றாகக் கருதப்படுவதால், தங்கள் தொழில் போதுமான அளவில் மதிக்கப்படவில்லை என்ற உணர்வை வெளிப்படுத்துகின்றனர்.
தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு நிறுவனங்கள் தேவையான அனைத்தையும் வழங்கும் நிலையில், ஆசிரியர்கள் தொடர்ந்து தங்கள் சொந்த பணத்தை செலவிட வேண்டிய நிலை அரசாங்க பாடசாலைகளின் அமைப்பின் பலவீனத்தை வெளிக்காட்டுகிறது. இந்த நிலை மாறவில்லை என்றால், ஒருநாள் ஆசிரியர்கள் பணம் செலவிட மறுக்கும் போது, அரசாங்க பாடசாலைகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan