சிட்னி பயங்கரவாதத் தாக்குதல் - மேலதிக விபரங்கள்
14 மார்கழி 2025 ஞாயிறு 21:26 | பார்வைகள் : 3357
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பொண்டி கடற்கரையில் (Bondi beach) இன்று டிசம்பர் 14 ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்ட பயங்கரவாதத் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். யூதர்களிற்கான ஹனுக்கா விழாவை கொண்டாடிய யூதக் குடும்பங்களை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் பிரெஞ்சு குடிமகன் தான் எல்காயம் (Dan Elkayam) உயிரிழந்ததாக பிரான்சின் வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சர் ஜோன்-நோயல் பாரோ (Jean-Noël Barrot) அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் குடியரசுத் தலைவர் எமானுவேல் மக்ரோன், 'நமது நாட்டின் முழுமையான ஒற்றுமையை' அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்தார். அதேவேளை, பலர் பாரிசில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தின் முன் கூடிவந்து, சிட்னி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர் ஜோன்-நோயல் பாரோ தனது அறிக்கையில்
'யூதக் குடும்பங்களை தாக்கிய இந்த அருவருப்பான பயங்கரவாதச் செயலில் நமது சக குடிமகன் உயிரிழந்தது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தாருடன், யூதக் சமூகத்தாருடன், ஆஸ்திரேலிய மக்களுடன் நாங்கள் துயரத்தில் பங்கெடுக்கிறோம்,' என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
இந்தச் செயல், யூத விரோத வெறுப்பின் இன்னொரு கொடூர வெளிப்பாடாகும். அதை முறியடிக்க பிரான்ஸ் எந்த முயற்சியையும் தவறாது மேற்கொள்ளும். தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்து போராடும்.'ஹனுக்காவின் விளக்குகள் அணையக்கூடாது, அவை ஒருபோதும் அணையாது.'
எனத் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan