Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : பாடசாலை அதிபருக்கு கொலை மிரட்டல்!!

பரிஸ் : பாடசாலை அதிபருக்கு கொலை மிரட்டல்!!

14 மார்கழி 2025 ஞாயிறு 20:50 | பார்வைகள் : 366


பரிசில் உள்ள Marguerite-Long பாடசாலையின் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரிஸ் 17 ஆம் வட்டாரத்தின் Porte d'Asnières நிலையத்துக்கு அருகே உள்ள குறித்த பாடசாலையின் அதிபருக்கே இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12, வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில், பாடசாலைக்கு வந்த 20 வயதுடைய ஒருவர், பாடசாலை அதிபரைச் சந்தித்து அவரை அவமதித்து திட்டியுள்ளார். பின்னர் அவரை கொலை செய்வேன் எனவும் மிரட்டியுள்ளார்.

மிரட்டியவரின் தம்பி அதே பாடசாலையில் பயில்வதாகவும், அவர் தண்டனைக்குட்படுத்தியதாகவும், அதன் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை அடுத்து அதிபர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

அதிபர் குறித்த நபர் மீது கொலை அச்சுறுத்தல் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்