மார்செய்யில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான புதிய போராட்டத்தில் “அரசு வெற்றி பெறும்”: மக்ரோன் உறுதி!!
14 மார்கழி 2025 ஞாயிறு 08:00 | பார்வைகள் : 927
மார்செய்லயில் (Marseille) போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் அரசு உறுதியாக வெற்றி பெறும் என்று ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
“மார்செய் ஒன் கிராண்ட்” « Marseille en Grand » திட்டம் தொடங்கி நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், அரசு தொடர்ந்து எந்த தயக்கமும் இன்றி செயல்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். சுகாதாரமற்ற குடியிருப்புகள் குறைப்பு, கூடுதல் காவல்துறை மற்றும் நீதித்துறை நியமனம், போதைப்பொருள் விற்பனை மையங்கள் அகற்றம், போக்குவரத்து மற்றும் பள்ளிகள் மேம்பாடு போன்றவை நடைமுறையில் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கொலைகள் அதிகரித்துள்ள மார்செய்லயில், மெஹ்தி கெஸாசி கொலை ஒரு “மாற்றத்திற்கான திருப்புமுனை” எனக் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் போலவே வலுப்படுத்த வேண்டும் என மக்ரோன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நகரத்தின் பாதுகாப்பும் வளர்ச்சியும் உறுதி செய்ய, அரசு தனது ஆற்றலையும் உறுதியையும் இழக்காமல் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan