Paristamil Navigation Paristamil advert login

இல்-து-பிரான்சுக்குள் மாசடைவு 35% வீழ்ச்சி!!

இல்-து-பிரான்சுக்குள் மாசடைவு 35% வீழ்ச்சி!!

12 மார்கழி 2025 வெள்ளி 20:04 | பார்வைகள் : 395


இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள் கடந்த 12 ஆண்டுகளில் வளிமண்டல மாசடைவு 35% சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

2010 ஆம் ஆண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக Airparif நிறுவனம் அறிவித்துள்ளது. PM2.5 எனப்படும் சிறிய துகள் கொண்ட மாசு வளியில் கலந்து சுவாசிப்பதற்கு ஒவ்வாதவாறு கலந்திருந்த வளிமண்டலத்தை, பரிஸ் நகரசபை, இல்-து-பிரான்சின் மாகாண சபை போன்றவை இணைந்து பல முயற்சிகளின் பின்னர் இந்த முன்னேற்றம் கண்டுள்ளது.

PM2.5 துகள் கலந்த காற்றை சுவாசிப்பதால் மாரடைப்பு மற்றும் சுவாசப்பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு நைதரசன் ஒக்சைடு 48% சதவீதமும், மீத்தேன் ஆவியாகும் கரிம சேர்மங்கள் 36% சதவீதங்களும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமோனியா 15% சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்