Paristamil Navigation Paristamil advert login

அரசன் படத்தில் சிம்பு ஜோடி யார்?

அரசன் படத்தில் சிம்பு ஜோடி யார்?

11 மார்கழி 2025 வியாழன் 12:13 | பார்வைகள் : 129


கடந்த சில படங்களில் சிம்புக்கு, விண்ணை தாண்டி வருவாயா மாதிரி அழகான காதல் காட்சிகள் இல்லை. தக் லைப், வெந்து தணிந்தது காடு , பத்து தல_ மாநாடு படங்கள் ஆக் ஷன் கதை என்பதால் காதல் காட்சிகள் குறைவு. இப்போது வெற்றிமாறன் இயக்கும் அரசன் படமும் வன்முறை கதைக்களம் என்பதால் காதல் காட்சிகள் குறைவு என கூறப்படுகிறது.

அரசன் படத்தில் விஜய்சேதுபதி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா நடிக்கிறார்கள். சிம்புக்கு ஜோடி யார்? கதைப்படி அவருக்கு ஜோடி உண்டா என அவர் ரசிகர்கள் கேட்கிறார்கள். இன்னமும் அரசன் படத்துக்கு ஹீரோயின் அறிவிக்கப்படவில்லை. ஒரு சிலர் கயாடு லோகர் நடிக்கலாம் என கூறுகிறார்கள். சிம்புக்கு காதல் காட்சிகள் நன்றாக வரும். ஆனால் இப்போது பல படங்களில் அதை சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் ஏனோ தவிர்க்கிறார்கள். அவரை ஆக் ஷன் ஹீரோவாகவே பார்க்கிறார்கள் என அவர் ரசிகர்கள் பீல் பண்ணுகிறார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்