Paristamil Navigation Paristamil advert login

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே மோதல் - பலர் பலி

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே மோதல் - பலர் பலி

10 மார்கழி 2025 புதன் 18:38 | பார்வைகள் : 149


தாய்லாந்துடனான சமீபத்திய மோதலில் கம்போடியாவில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் 09-12-2025 தெரிவித்துள்ளனர்.

 

மேலும் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக 20,000 பேர் வரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

 

அத்துடன் கோயில் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் அழிவடைந்துள்ளதுடன், பொதுச் சேவைகளை சீர்குலைந்துள்ளதாக கம்போடிய அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இதற்கிடையே கம்போடியப் படைகள் தங்கள் துருப்புக்களை தாக்கி வருவதாகவும், குண்டுவீச்சு ட்ரோன்கள் மற்றும் காமிகேஸ் ட்ரோன்களைப் பயன்டுத்துவதாகவும் தாய்லாந்து இராணுவத்தினர் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்