Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் இராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு - 6 வீரர்கள் பலி

பாகிஸ்தானில் இராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு - 6 வீரர்கள் பலி

10 மார்கழி 2025 புதன் 16:38 | பார்வைகள் : 1305


பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் சோதனைச்சாவடியில் இராணுவ வீரர்களின் முகாமுக்கு அருகில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

திங்கட்கிழமை (8) இரவு முதல் செவ்வாய்க்கிழமை 9 -12-2025 காலை வரை தாக்குதல் நடத்தப்பட்டதில் 4 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்