வெளியாகும் ‘ஏகே 64’ படத்தின் அறிவிப்பு?
30 ஐப்பசி 2025 வியாழன் 15:36 | பார்வைகள் : 660
அஜித் நடிப்பில் அடுத்ததாக ‘ஏகே 64’ திரைப்படம் உருவாக இருக்கிறது. தலைப்பிடப்படாத இந்தப் படத்தை ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். ‘குட் பேட் அக்லி’ படம் அஜித் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்த நிலையில் அடுத்தது ஆதிக்- அஜித் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதன்படி இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராகுல் தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் இதற்கு இசையமைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் மோகன்லால், ஸ்ரீலீலா, சுவாசிகா ஆகியோர் நடிக்க உள்ளனர் என்றும் இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளது என்றும் பல தகவல்கள் வெளியாகி வருகிறது.
மேலும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வியாழக்கிழமை அன்று வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் டைட்டிலுடன் இந்த அறிவிப்பு வெளியாக இருக்கிறதாம். இது தவிர ரிலீஸ் தொடர்பான அப்டேட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனவே இசையமைப்பாளர் அனிருத், இது தொடர்பான அறிவிப்பு வீடியோவை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் இந்த அறிவிப்பில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட்டையும் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan