Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலில் போர் நிறுத்தத்தை கண்காணிக்கும் பிரித்தானியா படைகள்

இஸ்ரேலில்  போர் நிறுத்தத்தை கண்காணிக்கும்  பிரித்தானியா  படைகள்

22 ஐப்பசி 2025 புதன் 12:28 | பார்வைகள் : 248


போர் நிறுத்தத்தை கண்காணிக்க பிரித்தானியா தங்கள் படைகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமெரிக்காவின் தலையீட்டுக்கு பிறகு அமுலுக்கு வந்துள்ளது என்றாலும், அவ்வப்போது இரு தரப்புகளுக்கு இடையிலும் சிறிய மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காசாவில் நிலவும் பதற்றமான போர் நிறுத்தத்தை கண்காணிக்க அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று பிரித்தானியா தங்களது படை துருப்புகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்துள்ளது.

பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி தெரிவித்த தகவலில், பிரித்தானிய ராணுவத்தின் மூத்த தளபதி மற்றும் சிறிய ராணுவ குழு காசாவில் போர் நிறுத்தத்தை கண்காணிக்க இஸ்ரேலில் நிலைநிறுத்தப்படும் என்று அறிவித்தார்.

மேலும் புதிதாக உருவாக்கப்படும் பலதரப்பட்ட கண்காணிப்பு முயற்சியில் பிரித்தானியா தன்னுடைய பங்கை ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் அமெரிக்காவின் தலைமையில் செயல்படும் சிவில் இராணுவ ஒருங்கிணைவு மையத்தில் பிரித்தானிய தளபதி துணைத் தலைவராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு 10 நாட்கள் முன்னதாக, பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் இவெட் கூப்பர், இஸ்ரேலுக்கு பிரித்தானிய படைகளை அனுப்பும் எந்தவொரு திட்டமும் இல்லை என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்