Paristamil Navigation Paristamil advert login

பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரைக்கு அருகே நிலநடுக்கம்

பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரைக்கு அருகே நிலநடுக்கம்

22 ஐப்பசி 2025 புதன் 05:52 | பார்வைகள் : 118


பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரைக்கு அருகே சிறிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 3.1 அளவிலான இந்த நிலநடுக்கம் அதிகாலை 5.30 மணியளவில் சிட்னி நகரின் வடக்கே சுமார் 13 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் 16 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்ததாகவும், கிரேட்டர் விக்டோரியா பிராந்தியத்தின் பல இடங்களில் லேசாக உணரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுவரை எந்தவித சேதமும் பதிவு செய்யப்படவில்லை என்றும், சேதங்கள் ஏற்படும் வாய்ப்பும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5.4 அளவை விட குறைவான நிலநடுக்கங்கள் பொதுவாக சேதத்தை ஏற்படுத்துவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்