சூர்யாவின் ‘கருப்பு’ பட சிங்கிள் வெளியீடு!

20 ஐப்பசி 2025 திங்கள் 10:52 | பார்வைகள் : 182
சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தில் த்ரிஷா, சுவாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆன்மிக பின்னணியில் ஆக்ஷன் கதையாக இப்படம் அமையும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டதாகவும், ஆனால் விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட பணிகளால் படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை.
இதனால் இந்தப் படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்து பாடியுள்ளார். அவருடன் கானா முத்துவும் பாடியுள்ளார். விஷ்ணு எடவன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
சூர்யாவின் இன்ட்ரோ பாடலாகவும், கிராமத்து வாசனையுடன் ட்ரெண்டிங் வார்த்தைகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.