ரஜினி – பா. ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணையுமா ?
22 கார்த்திகை 2025 சனி 12:35 | பார்வைகள் : 626
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக கூலி திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து ரஜினி, ஜெயிலர் 2 திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இது தவிர கமல்ஹாசன் உடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும், கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் ரஜினி. அந்த வகையில் சமீபத்தில் தலைவர் 173 படத்தை சுந்தர்.சி இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் ஒரு சில நாட்களிலேயே சுந்தர்.சி அந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.எனவே தலைவர் 173 படத்தை யார் இயக்கப் போகிறார்? என்பது போன்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் கார்த்திக் சுப்பராஜ், ஆர்.ஜே. பாலாஜி போன்ற இயக்குனர்களின் பெயர்களும் அடிபடுகின்றன.
இந்நிலையில் ரஜினியும், பா. ரஞ்சித்தும் சமீபத்தில் விமான நிலையத்தில் சந்தித்து பேசி உள்ளனர். இவர்களுடைய இந்த சந்திப்பு எதார்த்தமானதாக தெரிந்தாலும் இந்த கூட்டணி மீண்டும் இணைந்தால் நன்றாக இருக்கும் என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் இவர்களது கூட்டணியில் வெளியான கபாலி, காலா ஆகிய இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் நாட்களில் வேறு ஏதேனும் தகவல் வெளியாகுமா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan