Paristamil Navigation Paristamil advert login

பிரபல சீரியல் நடிகை தனுஷ் மீது குற்றச்சாட்டு!

பிரபல சீரியல் நடிகை  தனுஷ் மீது குற்றச்சாட்டு!

18 கார்த்திகை 2025 செவ்வாய் 15:18 | பார்வைகள் : 858


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமைகளை கொண்டுள்ளார். மேலும் பாலிவுட், ஹாலிவுட் என எல்லை தாண்டி சாதனை படைத்து வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமாவிற்காக ஓயாது ஓடிக் கொண்டிருக்கும் தனுஷ் படு பிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் தனுஷ் மீது பிரபல சீரியல் நடிகை குற்றம் சாட்டியுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான ‘வானத்தைப்போல’ தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மான்யா ஆனந்த். சமீபத்தில் நடந்த பேட்டியில் இவர், தனக்கு தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், அதற்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் தன்னிடம் கேட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.தனுஷுடன் அட்ஜஸ்ட்மெண்ட் ..... பிரபல சீரியல் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

அந்த பேட்டியில் மான்யா, “எனக்கு தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கமிட்மெண்ட் என்ற பெயரில் நான் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் எனக்கு அழுத்தம் கொடுத்தார். நான் முடியாது என்று சொன்னேன். அதற்கு தனுஷ் சாருடன் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண மாட்டீங்களா? என்று கேட்டார். யாராக இருந்தாலும் முடியாது என்று சொல்லிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே விவாகரத்து தொடர்பாகவும், நடிகைகள் தொடர்பாகவும் தனுஷ் குறித்து பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் சீரியல் நடிகை மான்யாவின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்