Paristamil Navigation Paristamil advert login

ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா சமந்தா?

ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா  சமந்தா?

18 கார்த்திகை 2025 செவ்வாய் 15:18 | பார்வைகள் : 165


தெலுங்கில் ‘நின்னு கோரி’, ‘மஜிலி’, ‘குஷி’ போன்ற படங்களை இயக்கியவர் சிவா நிர்வாணா. சமீப காலமாக இவரின் அடுத்த படத்தில் கதாநாயகனாக ரவி தேஜா நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகின.

இதைத்தொடர்ந்து, சிவா நிர்வாணா – ரவி தேஜா கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படத்தில் சமந்தா கதாநாயகியாக இணைகிறார் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் சமந்தா, முதல் முறையாக ரவி தேஜாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ‘காந்தாரா’ படத்தின் மூலம் பிரபலமான அஜனேஷ் லோகேஷ் பணியாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்