ஜனாதிபதி அநுர வௌிப்படுத்திய புலனாய்வு குறித்த தகவல்!
14 கார்த்திகை 2025 வெள்ளி 12:59 | பார்வைகள் : 146
முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது தனக்குத் தெரியவந்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கார்த்திகை வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தினால் ஊகிக்கக்கூடிய பொருளாதாரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வருமானத்தை எதிர்பார்த்த மட்டத்தை விட அதிகரிக்க தற்போது முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் 36வது கார்த்திகை வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வு, அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு விஹாரமஹாதேவி திறந்தவெளி அரங்க வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீர உள்ளிட்ட அக்கட்சியில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அண்மையில் நான் புலனாய்வு அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். ஒரே வங்கி கணக்கில் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும், சம்பளம் வழங்கப்பட்டுள்ளதுடன், சிங்கள அடிப்படைவாதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் வரிப் பணத்திலேயே இது வழங்கப்பட்டுள்ளமை இன்று வௌியாகியுள்ளது.
சிங்கள அடிப்படைவாதிகளிடம் நீங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கூச்சலிடுங்கள் என்று இதோ பணம்.
மறுபக்கம் முஸ்லிம் அடிப்படைவாதிகளிடம் சிங்கள மக்களுக்கு எதிராக கூச்சலிடுங்கள் இதோ பணம்.
ஒரே அசாங்கத்தின் கீழ் வரிப்பணத்தில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் நிலையாக இருப்பதற்காக இந்த இனவாத்தை பயன்படுத்தினர்.
எனினும் இனி ஒருபோதும் எமது நாட்டில் இனவாதத்திற்கு இடமில்லை.
எமது அரசாங்கத்தை கவிழ்ப்பது என்பது இயலாத காரியம் என்றார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan