வெளிநாடு ஒன்றில் இலங்கையர்கள் இருவருக்கு நேர்ந்த கதி
10 கார்த்திகை 2025 திங்கள் 17:37 | பார்வைகள் : 1915
தென்கொரியாவில் பணிபுரிந்த இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
உயிரிழந்த இருவரும் உள்ளூர் மீன் வளர்ப்புப் பண்ணை ஒன்றில் பணிபுரிந்த இலங்கைத் தொழிலாளர்கள் என்று கூறப்படுகின்றது.
நேற்று (09) இரவு, உள்ளூர் மீன் வளர்ப்புப் பண்ணை ஒன்றின் நீர்த்தாங்கிக்குள் மூன்று பேர் உயிரிழந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்குப் பொலிஸ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, குறித்த பண்ணையில் இருந்த 4 மீட்டர் அகலம், 3 மீட்டர் நீளம் மற்றும் 2 மீட்டர் உயரம் கொண்ட பெரிய நீர்த்தாங்கி ஒன்றில் சிக்கி, 50 வயதுடைய கொரிய நாட்டவரும், 20 மற்றும் 30 வயதுடைய இரண்டு இலங்கையர்களும் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
உயிரிழந்த கொரிய நாட்டவர் அந்த மீன் வளர்ப்புப் பண்ணையின் முகாமையாளராகப் பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan