பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி; போலீஸ் குடியிருப்பில் நடந்த கொலை பற்றி அண்ணாமலை ஆவேசம்
11 கார்த்திகை 2025 செவ்வாய் 06:00 | பார்வைகள் : 1258
போலீஸ் துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலின், கையாலாகாத நிலையில் போலீசாரை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை: திமுக ஆட்சியில், தமிழகத்தில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. இதன் உச்சகட்டமாக, இன்று காலை, திருச்சி மாநகர் பீமநகர் மார்சிங் பேட்டையில், பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில், குறிப்பாக காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்திருப்பது, பொதுமக்கள் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியிருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின், தற்போது திருச்சியில் தான் தங்கியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, காவலர் குடியிருப்பிலேயே இப்படி ஒரு படுகொலை நடப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் அவலநிலையைக் காட்டுகிறது. பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என யாருக்குமே பாதுகாப்பில்லாத நிலையில் தமிழகம் தரம் தாழ்ந்திருக்கிறது.
போலீஸ் துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலின், கையாலாகாத நிலையில் போலீசாரை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan