Paristamil Navigation Paristamil advert login

அண்ணாதுரை, எம்ஜிஆரை மீண்டும் கொண்டு வந்தால் என்ன செய்வது? சீமான் ஆவேசம்

அண்ணாதுரை, எம்ஜிஆரை மீண்டும் கொண்டு வந்தால் என்ன செய்வது? சீமான் ஆவேசம்

19 புரட்டாசி 2025 வெள்ளி 05:05 | பார்வைகள் : 137


திமுக, அதிமுகவை அழிக்க போராடிக் கொண்டு இருக்கும் போது மீண்டும் அண்ணாதுரை, எம்ஜிஆரை கொண்டு வந்தால் என்ன செய்வது? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

இது குறித்து நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை எதிர்த்து பேசினால் திமுக கைக்கூலி என்கிறார்கள். விஜய்யை விமர்சிப்பதால் திமுகவிடம் நான் பெட்டி வாங்கிவிட்டது போல் பேசுகிறார்கள். திமுகவை எதிர்த்து பேசினால் ஆர்எஸ்எஸ் பாஜவின் கைக்கூலி என்கிறார்கள். தேர்தலில் திமுக தனித்து நின்று போட்டியிட வேண்டும்.

ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது. எந்த கொம்பனாலும் என திமுக சொல்கிறது. தனியாக போகும் போது பாட்டு பாடி செல்கிறீர்கள் என்றால் பயந்து விட்டீர்கள் எனப் பொருள், பேய் பிசாசு வருகிறது என்று அது போல் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளையும் கூட வைத்துக் கொண்டு, ஓட்டுக்குக்கு காசு தேவைப்படுகிறது. பிறகு எந்த கொம்பனாலும் என்னை வீழ்த்த முடியாது என்று சொல்வது ஏன்?

வந்தது ஏன்?

என்னை வாழ வைத்த மக்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டும் என்று சொன்னால் பரவாயில்லை . உங்களுக்காக என்னுடைய வருவாயை , உச்சத்தை விட்டுட்டு வந்தேன் என்று சொல்லும்போது எங்களுக்கு ஒரு கேள்வி வருகிறது யார் உங்களை வரச் சொன்னார்கள் என்று? அரசியலுக்கு வந்த பிறகு சேவை செய்ய வேண்டும். பெருமை பேசக் கூடாது. சினிமாவை விட்டு விட்டு விஜய்யை அரசியலுக்கு வர சொன்னது யார்?

எனக்கு தம்பி

விஜய் மற்றவர்களுக்கு தான் தலைவர், என்றைக்கும் எனக்கு தம்பி தான். விஜய்யை அரசியலில் சீர்படுத்தும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. திமுக, அதிமுகவை அழிக்க போராடிக் கொண்டு இருக்கும் போது மீண்டும் அண்ணாதுரை, எம்ஜிஆரை கொண்டு வந்தால் என்ன செய்வது? 50 ஆண்டுகள் கழித்து என்ன திட்டம் தரப் போறீங்க?

எல்லாம் தனியாருக்கு தான் தரப் போறீங்க. எல்லாத் துறைகளையும் பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டால் நாடு வளருமா? இல்லை அந்தத் தனியார் முதலாளிகளின் வீடு வளருமா? ராணுவத்திற்கு மற்ற நாடுகளில் ஆயுதம் வாங்கிவிட்டு எந்த நாட்டோடு சண்டை போட்டு என்னை காப்பாற்ற போறீங்க? இவ்வாறு சீமான் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்