Paristamil Navigation Paristamil advert login

‘சூர்யா 47’ படத்தில் இணையும் பஹத் பாசில்

‘சூர்யா 47’ படத்தில் இணையும்  பஹத் பாசில்

19 ஐப்பசி 2025 ஞாயிறு 16:56 | பார்வைகள் : 178


ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள கருப்பு படத்தை அடுத்து தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. மமிதா பைஜூ நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த படத்தை அடுத்து மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கும் தனது 47 வது படத்தில் நடிக்க போகிறார் சூர்யா. ஆக் ஷன் கதையில் உருவாகும் இப்படத்தில் சூர்யா போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். மேலும், இதற்கு முன்பு ஜீத்து மாதவன் இயக்கிய ஆவேசம் என்ற படத்தில் நாயகனாக நடித்த பகத் பாஸில் இந்த சூர்யா 47 வது படத்தில் வில்லனாக நடிக்கிறார். அதோடு பகத்பாசிலின் மனைவியான நடிகை நஸ்ரியா இந்த படத்தில் நாயகியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்