விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ்..
19 ஐப்பசி 2025 ஞாயிறு 15:56 | பார்வைகள் : 2457
2023 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை லியோ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படத்தில் விஜய், திரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவையொட்டி படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகளை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமைதியாக இருப்பதற்கு சரண்டர் என்று பொருள் கிடையாது என்றும், வெற்றி வாகை சூடுவதற்கு முன்பான அமைதியே இது போன்ற வசனங்கள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளியான இந்த வீடியோ விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan