Paristamil Navigation Paristamil advert login

சாட்ஜிபிடியில் வர உள்ள ஆபாச உள்ளடக்கங்கள் - Open AI CEO தகவல்

சாட்ஜிபிடியில் வர உள்ள ஆபாச உள்ளடக்கங்கள் - Open AI CEO தகவல்

17 ஐப்பசி 2025 வெள்ளி 11:59 | பார்வைகள் : 128


AI சாட்பாட்களின் பயன்பாடு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பள்ளி மாணவர்கள் வீட்டுபாடத்தில் சந்தேகம் கேட்பது தொடங்கி, ஐடி ஊழியர்களுக்கு கோடிங் எழுதி தருவது, பயண ஆலோசனை, நிதி ஆலோசனை என பல்வேறு தேவைகளுக்காக அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஜெமினி, மெட்டா என பல்வேறு சாட்பாட்கள் இருந்தாலும், Open AI நிறுவனத்தின் சாட்ஜிபிடி சாட்பாட் உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சாட்ஜிபிடியில் பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆபாச உள்ளடக்கங்களை தடை செய்திருந்தது.

இந்நிலையில், வயது வந்தோருக்கு ஆபாச உள்ளடக்கங்களை வழங்க உள்ளதாக Open AI CEO சாம் அல்ட்மன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மனநலப் பிரச்சினைகளில் கவனமாக இருப்பதை உறுதி செய்வதற்காக சாட்ஜிபிடியை மிகவும் கட்டுப்படுத்தியுள்ளோம்.

மனநலப் பிரச்சினைகள் இல்லாத பல பயனர்களுக்கு இது குறைவான பயனுள்ளதாகவோ அல்லது குறைவான சுவாரஸ்யமாகவோ இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். இதனால் பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இதை சரிசெய்ய விரும்பினோம்.

சில வாரங்களில் வெளியாக உள்ள சாட்ஜிபிடி பதிப்பில், சாட்ஜிபிடி உங்களுடன் மனிதர்களை போல் உரையாட வேண்டும், அதிக எமோஜிக்களை பயன்படுத்த வேண்டும், ஒரு நண்பரைப் போல செயல்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால் அவ்வாறு நடந்து கொள்ளும்.

"டிசம்பரில் வயதுவந்த பயனர்களை பெரியவர்களைப் போல நடத்துங்கள்" என்ற கொள்கையின் ஒரு பகுதியாக, வயது சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கு காமம் போன்ற இன்னும் பலவற்றை நாங்கள் அனுமதிப்போம்" என தெரிவித்துள்ளார்.

ஏற்கனேவே ChatGPT சுயதீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த தவறியதாகவும், போதைப்பொருள், மது போன்றவற்றில் ஆபத்தான ஆலோசனைகளை வழங்கியதாகவும் அதன் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், காமம் தொடர்பான உள்ளடக்கங்களை வழங்கப்போவதாக அதிகார்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், குழந்தைகள் சாட்ஜிபிடியை பயன்படுத்தும் போது பெற்றோர்கள் அதனை கண்காணிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்