‘கருப்பு’ படத்தின் வெளியீடு எப்போது?
12 ஐப்பசி 2025 ஞாயிறு 17:11 | பார்வைகள் : 737
சூர்யாவுடன் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா, மாயா ரவி, ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி அப்டேட் கொடுத்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ‘கருப்பு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
‘கருப்பு’ படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா, மாயா ரவி, ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகின்றனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே. விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். நாட்டார் தெய்வ வழிபாடு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு கிராமத்து பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
சூர்யாவின் 50வது பிறந்தநாளில் ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ‘கருப்பு’ படம் தீபாவளிக்கு ரிலீசாகலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அது இதுநாள் வரை உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையே தான் படத்தின் வெளியீடு எப்போது என்பதை படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படுத்தியுள்ளார்.
தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் பேசும்போது, "படம் முடிவடையும் நிலையில் உள்ளது. முதலில் ஆரம்பத்தில் தீபாவளிக்கு படத்தை வெளியிட இருந்தோம். ஆனால் வெளியீடு தள்ளிப்போவதற்கு காரணம், கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருந்ததே. அதனால், வெளியீடு தள்ளிப்போகிறது. படம் எனக்கும் சரி, இரண்டு நாட்கள் முன்பு படம் பார்த்த தயாரிப்பாளர்களுக்கும் சரி ‘கருப்பு’ படம் ரொம்பவே பிடித்துள்ளது. தீபாவளிக்கு படம் வெளியாகாவிட்டாலும், படத்தின் முதல் பாடல் வெளியாகும். தனது நடனத்தால் சூர்யா அசரடித்துள்ளார். படம் அடுத்த வருடமே ரிலீசாகும்” என்று தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan