தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு…
11 ஐப்பசி 2025 சனி 16:21 | பார்வைகள் : 4529
சிம்பு தற்போது ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இதன் முன்னோட்டம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தீபாவளிக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இவர், ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 50வது படத்திலும், ‘டிராகன்’ படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனது 51வது படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இவருடைய அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு, தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.அதாவது ‘மனசனமஹா’ எனும் குறும்படத்தை இயக்கிய தீபக் ரெட்டி இந்த படத்தை இயக்கப்போவதாகவும் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதனை தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களும், கதைக்களம் குறித்த அப்டேட்டுகளும் வெளியாகும் என நம்பப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan