Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம்! - அரசியல் தீர்வுக்கு நல்வாய்ப்பு!!

இஸ்ரேல் ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம்! - அரசியல் தீர்வுக்கு நல்வாய்ப்பு!!

9 ஐப்பசி 2025 வியாழன் 18:51 | பார்வைகள் : 2026


இஸ்ரேலுடன் ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இணக்கம் தெரிவித்தது, 'இரு தேசம்' எனும் அரசியல் தீர்வை எட்டக்கூடிய நல்வாய்ப்பாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

'பால்ஸ்தீனம் - இஸ்ரேல்' என இரு தேச ஒப்பந்தத்துக்கு பல்வேறு உலக நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. பிரான்ஸ் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் கொண்டுவந்த 20 நிபந்தனைகள் அடங்கிய போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒத்துழைத்து, இஸ்ரேலுடன் இணக்கப்பட்டுக்கு வந்துள்ளது. பணயக்கைதிகளும் பரிமாற்றப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவிக்கையில், "காசாவில் பணயக்கைதிகள் விடுதலை மற்றும் போர் நிறுத்தம் தொடர்பாக நேற்றிரவு எட்டப்பட்ட ஒப்பந்தத்தையும், இதை அடைவதற்கான ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கத்தார், எகிப்து மற்றும் துருக்கிய மத்தியஸ்தர்களின் முயற்சிகளையும் நான் வரவேற்கிறேன்." என குறிப்பிட்டார்.

அத்தோடு, "இது இரு தேச அரசியல் தீர்வுக்கான நல்வாய்ப்பாக அமைந்துள்ளது" எனவும் குறிப்பிட்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்