CSK அணிக்கு வரும் பதும் நிசங்க? இந்த வீரர் வெளியேறுகிறாரா?
4 ஐப்பசி 2025 சனி 09:09 | பார்வைகள் : 903
பதும் நிசங்கவை அணிக்குள் கொண்டு வர CSK உள்ளிட்ட ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டி வருகிறது.
2025 ஐபிஎல் தொடரில், முதல்முறையாக சென்னை அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்தது. முக்கிய வீரர்கள் பலரும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே அணியின் நிலைக்கான காரணமாக கருதப்படுகிறது.
இதன் காரணமாக 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னர், சில வீரர்களை விடுவித்து, புதிய வீரர்களை அணிக்குள் கொண்டு வரும் முடிவில் உள்ளனர்.
தொடரின் இறுதிக்கட்ட போட்டிகளில், ப்ரேவிஸ், ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல் போன்ற இளம்வீரர்களை அணியில் இணைத்தது.
இந்நிலையில் வரும் மினி ஏலத்தில், டிவோன் கான்வேவை நீக்கி விட்டு இலங்கை வீரர் பதும் நிசங்காவை CSK அணியில் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025 ஆசிய கோப்பை தொடரில், இலங்கை வீரர் பதும் நிசங்க 6 போட்டிகளில் விளையாடி, இந்தியாவிற்கு எதிரான சதம் உட்பட 261 ஓட்டங்கள் குவித்தார்.
கடந்த ஐபிஎல் ஏலத்தில், ரூ.75 லட்சத்தை அடிப்படை விலையாக நிர்ணயித்து ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்திருந்தார். ஆனால் எந்த அணியும் அவரை வாங்கவில்லை.
தற்போது இந்தியாவிற்கு எதிராக சதமடித்துள்ளதால், அவரை வாங்க ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டுகின்றன.
இதே போல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் பதும் நிசங்கவை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan