பரிஸ் : வெப்பம் தணிந்தது… மழை இடி மின்னல்!

28 ஆவணி 2025 வியாழன் 19:13 | பார்வைகள் : 530
பரிசில் நிலவிய வெப்பமாக காலநிலை தணிந்து, இடி மின்னல் தாக்குதல்கள் மற்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் தெரிவிக்கிறது.
நாளை ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை நாட்டின் 80 மாவட்டங்களுக்கு இடி மின்னல் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் தலைநகர் பரிஸ் மற்றும் இல்-து-பிரான்ஸ் மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்குகின்றன. பிற்பகலின் பின்னர் வானம் இருள் மூடி காணப்படும் எனவும், இடி மின்னல் தாக்குதல்களுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெப்ப நிலைகள் 16°C முதல் 18°C வரை நிலவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. காற்றின் வேகமும் 90 கி.மீ வேகம் வரை வீசும் எனவும், தோட்டங்கள், பூங்காக்கள் மூடப்படுவது தொடர்பில் நாளை காலை அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.