Paristamil Navigation Paristamil advert login

தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ்க்கு பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது: அண்ணாமலை

தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ்க்கு பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது: அண்ணாமலை

17 புரட்டாசி 2025 புதன் 10:18 | பார்வைகள் : 137


தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ்க்கு பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது. அவர் பேச்சு பாஜவை பாராட்டும் வகையில் உள்ளது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னையில் நடந்த பாஜ மையக் குழு கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: அக்டோபர் முதல் தமிழகத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். மாவட்டந்தோறும் நிர்வாகிகள் சந்திப்பு, சமுதாய தலைவர்கள் சந்திப்பை நயினார் நாகேந்திரன் மேற்கொள்வார். நாள்தோறும் 3 இடங்களில் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

தினசரி இரண்டு இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்து 3 வது இடத்தில் பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசுவார். இபிஎஸ்யின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நடைபெறுகிறது. இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பாஜ தொண்டர்கள் பங்கேற்று வருகின்றனர்.

தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ்க்கு பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது. அவர் பேச்சு பாஜவை பாராட்டும் வகையில் உள்ளது. தமிழகம் முழுவதும் தேஜ கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்