சரவண பவன் ராஜகோபாலின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மோகன்லால் ?
7 புரட்டாசி 2025 ஞாயிறு 14:03 | பார்வைகள் : 1511
சரவண பவன் ராஜகோபாலின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை பிரபல நடிகரை வைத்து இயக்குநர் ஞானவேல் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரவண பவன் உணவகத்தின் உரிமையாளரான ராஜகோபால், ஜீவஜோதியின் கணவரை கடத்தி கொலை செய்ததாக உச்சநீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.வழக்கு நடைபெற்றபோது பத்திரிகையாளராக இருந்த இயக்குநர் ஞானவேல், இந்த வழக்கை மையமாக வைத்து 'தோசா கிங்' என்ற பெயரில் திரைப்படத்தை இயக்க நீண்ட காலமாக முயற்சி செய்து வந்தார்.
இதில், பல்வேறு சவால்கள் இருந்ததால் இந்த படத்திற்கான வேலைகள் தள்ளிப்போனதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சரவண பவன் ராஜகோபாலின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோகன்லாலிடம் படத்தின் கதையை இயக்குநர் ஞானவேல் கூறியிருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan