மெஸ்ஸியின் சாதனையை முறியடித்த ரொனால்டோ! 40 வயதில் அபார ஆட்டம்
7 புரட்டாசி 2025 ஞாயிறு 09:03 | பார்வைகள் : 1304
உலகக்கிண்ண தகுதிச்சுற்றில் லியோனல் மெஸ்ஸியின் சாதனையை போர்த்துக்கல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ முறியடித்தார்.
எரேவனில் நடந்த உலகக்கிண்ண தகுதிச்சுற்றுப் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் ஆர்மேனியா அணிகள் மோதின.
ஜோவோ பெலிக்ஸ் 10 மற்றும் 61வது நிமிடங்களில் என இரண்டு கோல்கள் அடித்தார். அதேபோல் ஜாம்பவான் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) அபாரமாக இரண்டு கோல்கள் (21, 46) அடித்தார்.
மேலும் ஜோவோ கேன்செல்லோ ஒரு கோல் அடிக்க, போர்த்துக்கல் அணி 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
ரொனால்டோ இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம், உலகக்கிண்ண தகுதிச்சுற்றில் அவரது கோல்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது.
இதன்மூலம் அவர் தனது போட்டியாளரான லியோனல் மெஸ்ஸியின் (36) சாதனையை முறியடித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்.
முதல் இடத்தில் 39 கோல்களுடன் கவுதமாலாவைச் சேர்ந்த கார்லோஸ் ரூய்ஸ் (Carlos Ruiz) உள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan