Paristamil Navigation Paristamil advert login

சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்ற டொவினோ தாமஸ்!

சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்ற டொவினோ தாமஸ்!

5 புரட்டாசி 2025 வெள்ளி 18:03 | பார்வைகள் : 171


மலையாள சினிமாவின் பிரபல நடிகர் டொவினோ தாமஸ். தமிழில் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்தார். கடந்த மே மாதம் இவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ‛நரிவேட்ட'. இதில் முக்கிய வேடத்தில் இயக்குனரும், நடிகருமான சேரன் நடித்தார். அனுராஜ் மனோகர் இயக்கினார்.

நெதர்லாந்தின், ஆம்ஸ்டர்டெமில் வழங்கப்படும் செப்டிமஸ் உலகளவில் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. இந்நிலையில் நரிவேட்டை படத்தில் நடித்ததற்காக சிறந்த ஆசிய நடிகருக்கான செப்டிமஸ் விருதை டொவினோ தாமஸ் வென்றுள்ளார். இந்த விருதை இவர் பெறுவது இரண்டாவது முறையாகும். முன்னதாக 2018 என்ற படத்திற்காகவும் இவர் ஏற்கனவே விருது வென்றுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்