மீண்டும் டோலிவுட் இயக்குனருடன் கைக்கோர்கிறாரா தனுஷ்?
5 புரட்டாசி 2025 வெள்ளி 18:03 | பார்வைகள் : 1195
நடிகர் தனுஷ் தற்போது தமிழில் ‛இட்லி கடை’ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். மேலும் ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் இயக்கும் படங்களிலும் தனுஷ் நடிக்கவுள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில், தனுஷ் வாத்தி, குபேரா ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, விராட பருவம் படத்தை இயக்கிய வேணு உடுகுலா தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார், இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் யு.வி. கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. கடந்த வாரம் இந்தப்படத்திற்கான கதை விவாதப் பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan