Paristamil Navigation Paristamil advert login

லிஸ்பன் கேபிள் ரயில் விபத்தில் பிரெஞ்சு பெண் காயம்!!

லிஸ்பன் கேபிள் ரயில் விபத்தில் பிரெஞ்சு பெண் காயம்!!

4 புரட்டாசி 2025 வியாழன் 17:32 | பார்வைகள் : 409


செப்டம்பர் 3 ஆம் திகதி லிஸ்பனில் நடந்த கேபிள் ரயில் விபத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 21 பேரில் ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் என பிரான்ஸ் வெளிநாட்டுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த கேபிள் ரயிலான குளோரியா, 1885 ஆம் ஆண்டு பிரெஞ்சு போர்த்துகீசிய பொறியாளர் Raoul Mesnier du Ponsard வடிவமைத்தது என்பதால், இது வரலாற்று ரீதியாகவும் பிரான்சுடன் தொடர்புடையது.

இந்த பேரழிவுக்குப் பிறகு, பிரான்ஸ் அரசியல் தலைவர்கள் போர்த்துகலுக்குத் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். ஐரோப்பா தொடர்பான அமைச்சர் பெஞ்சமின் ஹடாட் (Benjamin Haddad) மற்றும் பாரிஸ் மேயர் ஆன் ஹிதால்கோ இருவரும் சமூக வலைதளங்களில் போர்த்துகீசிய மக்களுக்கு இரங்கல் தெரிவித்து, இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ் அவர்களுடன் இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்