கஞ்சா விழுங்கிய 9 மாத குழந்தை மருத்துவமனையில் !! தற்காலிக பாதுகாப்பு உத்தரவு!!
4 புரட்டாசி 2025 வியாழன் 16:32 | பார்வைகள் : 2276
எஸோன் மாவட்டத்தில் 9 மாத குழந்தை கஞ்சா ரெசின் விழுங்கிய நிலையில் Arpajon மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. தூக்கமயக்கத்தில் இருந்ததால், தாயார் அவசர உதவியை அழைத்துள்ளார்.
மருத்துவ பரிசோதனையில் குழந்தையின் உடலில் கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டது. காவல் துறையினர் வீட்டில் நடத்திய சோதனையில் வீடு அசுத்தமாக இருப்பதும், ஒரு நாய் அதன் கழிவுகளுடன் கூடிய கூண்டில் அடைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அந்தக் குழந்தை மற்றும் அவளது 2.5 வயது சகோதரருக்குத் தற்காலிக பாதுகாப்பு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பெற்றோருக்கு எதிரான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது போன்ற சம்பவம் முந்தைய மாதம் ய்வலின் பகுதியில் நடந்ததையும் நினைவுகூரலாம், அங்கு 9 மாத பெண் குழந்தை கஞ்சா எடுத்ததற்காக பெற்றோர் காவலில் எடுக்கப்பட்டனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan