Paristamil Navigation Paristamil advert login

தமிழ் சினிமாவில் உதயநிதியின் மகன் இன்பநிதி..

தமிழ் சினிமாவில் உதயநிதியின் மகன் இன்பநிதி..

3 புரட்டாசி 2025 புதன் 18:16 | பார்வைகள் : 240


’பவர் பாண்டி’, ‘ராயன்’,‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘இட்லி கடை’. இந்தப் படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், பார்த்திபன், ஷாலினி பாண்டே, சமுத்திரகனி, ராஜ்கிரண், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆதித்யா பாஸ்கரன் தயாரிக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் அண்மையில் வெளியானது. காதல் பாடலான இந்தப் பாடலை தனுஷே எழுதி, பாடியிருந்தார். ‘என்ன சுகம்’ எனத் தொடங்கும் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதற்கிடையே, ‘இட்லி கடை' படத்தை தியேட்டர் ரிலீஸை வாங்கியுள்ள ரெட் ஜெயன்ட் நிறுவனம் அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி பெயரில் வெளியிடுகிறது. இதற்கான அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இன்பநிதி சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அது உறுதியாகியிருக்கிறது.

தயாரிப்பாளராக என்ட்ரி கொடுத்துள்ள இன்பநிதி இதன்பின் திரைப்பட தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, இன்பநிதிக்கு நடிகர் தனுஷ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "தமிழ்நாடு முழுவதும் இட்லி கடை படத்தை Red giant வெளியிடுகிறது; இன்பன் உதயநிதியின் புதிய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்

வர்த்தக‌ விளம்பரங்கள்