Paristamil Navigation Paristamil advert login

பயணிக்கும் - விமான நிலைய ஊழியருக்கும் இடையே மோதல்..!!

பயணிக்கும் - விமான நிலைய ஊழியருக்கும் இடையே மோதல்..!!

30 ஆவணி 2025 சனி 06:00 | பார்வைகள் : 1121


விமான நிலைய ஊழியருடன் மோதலில் ஈடுபட்ட தம்பதியினர் இருவர் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஓகஸ்ட் 23 ஆம் திகதி, சனிக்கிழமை நீஸ் விமான நிலையம் வழியாக தம்பதியினர் இருவர் கிரீஸ் நாட்டின் Mykonos நகர் நோக்கி பயணிக்க தயாராகினர்.  விமான நிலையத்தில் வைத்து அவர்கள் எடுத்து வந்த பொதி அளவுக்கு அதிகமான எடையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பயணி ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலதிக கட்டணம் எதுவும் செலுத்த முடியாது என தெரிவித்து ஆரம்பித்த வாக்குவாதம், சில நிமிடங்களிலேயே மோதலாக மாறியது.

இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அவரது மனையும் ஊழியரை தாக்கியுள்ளார்.

தம்பதியினர் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டிசம்பர் 5 ஆம் திகதி நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட உள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்