Paristamil Navigation Paristamil advert login

புட்டினை அவமதிக்கும் மக்ரோன்! - ரஷ்யா கண்டனம்!!

புட்டினை அவமதிக்கும் மக்ரோன்! - ரஷ்யா கண்டனம்!!

29 ஆவணி 2025 வெள்ளி 18:04 | பார்வைகள் : 329


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை மக்ரோன் தொடர்ச்சியாக அவமதித்து வருவதாக தெரிவித்து, ரஷ்யா கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

புட்டினை அரக்கன் எனவும், சர்வதிகாரி எனவும் ஜனாதிபதி மக்ரோன் கடந்த காலங்களில் வர்ணித்திருந்தார். இந்த வார்த்தைப் பிரயோகங்களுக்கு ரஷ்யாவின் வெளியுறவுத்துறையின் பேச்சாளர் Maria Zakharova கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மக்ரோன் ஜனநாயகத்தின் எல்லையை கடந்துவிட்டார்.  அவர் அரசியலை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறார். பிரான்ஸ் தனது சித்தாந்தத்தை உலக சித்தாந்தமாக நிறுவ முயல்கிறது!” என அவர் தெரிவித்தார்.

அண்மையில் ஜனாதிபதி மக்ரோன் அமெரிக்காவின் வெள்ளை மாளியில் வைத்து டொனால்ட் ட்ரம்பினைச் சந்தித்திருந்தார். அதன்போது புட்டினை சர்வதிகாரி என மக்ரோன் விபரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்