பதவி விலகுவாரா மக்ரோன்..??!!

29 ஆவணி 2025 வெள்ளி 18:04 | பார்வைகள் : 363
பிரதமர் பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவரப்பட உள்ளதை அடுத்து, பிரதமர் பதவி விலகுவார் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அரசாங்கம் கவிழ்க்கப்பட்டால் ஜனாதிபதி மக்ரோன் பதவி விலகுவாரா எனும் கேளவி எழுப்பப்பட்டது.
இன்று ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மக்ரோன் இதற்கு பதிலளித்துள்ளார். ‘நான் ஜனநாயகம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். மக்கள் வாக்களித்து நான் ஜனாதிபதியானேன். மக்கள் என்னைத்தான் தான் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தேர்ந்தெடுத்திருந்தார்கள். காலம் முடியும் வரை ஆட்சி தொடரும்!” என மக்ரோன் தெரிவித்தார்.
அதேவேளை, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது உறுப்பினர்கள் பொறுப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் எனவும் மக்ரோன் கேட்டுக்கொண்டார்.