வறட்சியில் சிக்கியுள்ள 45 மாவட்டங்கள்!!

29 ஆவணி 2025 வெள்ளி 17:04 | பார்வைகள் : 270
சென்ற 2024 ஆம் ஆண்டு பிரான்சில் 21 மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியிருந்த நிலையில், இவ்வாண்டில் அந்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
சென்ற ஆண்டை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாக வறட்சி நிலவுவதாகவும், இதனால் நீர் வழங்கலில் பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிகையின் படி இந்த எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அவை மாறுதலுக்கு உள்ளாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
குறைந்த மழைவீழ்ச்சியும், அதிக வெப்பமும், காற்றின் தன்மையும் மாறுபடுவதால் இந்த வறட்சி ஏற்பட்டதாகவும், நிலத்தடி நீர் வெகுவாக குறைவடைந்துள்ளதால் விவசாயத்தேவைகளுக்கான நீர் பெறுவதில் சிரமம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, சென்ற 2023 ஆம் ஆண்டு பிரான்சில் மிக கடுமையான வறட்சி நிலவியிருந்தது அறிந்ததே. அவ்வருடத்தில் 48 மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டிருந்தது.