"எங்கள் கதவுகளுக்கு வெளியே உள்ள ஓர் ஓணான்" மக்ரோனின் வார்த்தை பிரயோகங்களுக்கு ரஷ்யாவில் பதிலடி!!

29 ஆவணி 2025 வெள்ளி 16:08 | பார்வைகள் : 595
ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஒரு நேர்காணலில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினை "பேயன்" மற்றும் "வேட்டையாடுபவர்" என்று குறிப்பிட்டதையடுத்து, ரஷ்யா கடும் எதிர்வினை தெரிவித்துள்ளது.
ரஷ்ய வெளியுறவுத்துறை பேச்சாளர் மரியா ஸகரோவா (Maria Zakharova), இந்தக் கருத்துகள் நாகரிக எல்லைகளை மீறியவையாகவும், ரஷ்யா மற்றும் அதன் மக்களிடம் அவமானமாகவும் உள்ளன என்று கூறியுள்ளார். மக்ரோன், புட்டின் அமைதியை விரும்பாதவர் என்றும், தனது நிலையை பாதுகாக்க தொடர்ந்து "உணவாக" ஏதாவது தேவைப்படுகின்ற ஒரு "ஓணான்" எனவும் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த ரஷ்யா, பிரான்ஸை "கழிவுண்ணி சிந்தனையுடன்" செயல்படும் நாடு என விமர்சித்து, உக்ரைனில் ஏற்பட்ட போரை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறது என குற்றஞ்சாட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் கடந்த சில ஆண்டுகளாக மோசமாகவே உள்ளன, குறிப்பாக பிரான்ஸ், ரஷ்யாவை தவறான தகவல்கள் பரப்புவதாகவும், ரஷ்யா, பிரான்ஸின் உக்ரைனுக்கான ஆதரவை கண்டிப்பதாகவும் இருக்கிறது.