இலங்கைக்கு எதிராக இரட்டைசதம் விளாசிய கேப்டன்! டிராவில் முடிந்த கடைசி டெஸ்ட்

23 ஆடி 2025 புதன் 14:51 | பார்வைகள் : 508
டார்வினில் நடந்த இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது. இலங்கை விடுதிகள்
இலங்கை ஏ அணியும் அவுஸ்திரேலிய ஏ அணியும் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி (4 நாட்கள்) டார்வினின் மர்ராரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 486 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பவன் ரத்னயகே (Pavnan Rathnayake) 122 ஓட்டங்களும், நுவனிது பெர்னாண்டோ (Nuwanidu Fernando) 102 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய அவுஸ்திரேலிய அணியில், ஜேக் வெதரால்ட் (Jake Weatherald) 183 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்
அதன் பின்னர் ஓலிவர் பேக்கே 92 ஓட்டங்களில் வெளியேற, அணித்தலைவர் ஜேசன் சங்கா இரட்டைசதம் அடித்தார்.
கடைசி நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 558 ஓட்டங்கள் எடுத்திருந்ததால், போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இறுதிவரை களத்தில் நின்ற ஜேசன் சங்கா (Jason Sangha) ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 202 ஓட்டங்கள் குவித்தார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1