Paristamil Navigation Paristamil advert login

புதிய கிரிக்கெட் அணியை வாங்கியுள்ள காவ்யா மாறன் - எத்தனை கோடிக்கு தெரியுமா?

புதிய கிரிக்கெட் அணியை வாங்கியுள்ள காவ்யா மாறன் - எத்தனை கோடிக்கு தெரியுமா?

22 ஆடி 2025 செவ்வாய் 13:38 | பார்வைகள் : 121


காவ்யா மாறன் சன் குழும தலைவர் கலாநிதிமாறனின் ஒரே மகள் ஆவார் காவ்யா மாறன். சன் குழுமம் சொந்தமாக பல்வேறு கிரிக்கெட் அணிகளை வைத்துள்ளது. காவ்யா மாறன் அந்த அணிகளை வழி நடத்தி வருகிறார்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், தென்னாப்பிரிக்காவின் SA20 தொடரின் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய அணிகளின் உரிமையாளர் உள்ளார்.

இந்நிலையில், சன் குழுமம் தற்போது இங்கிலாந்தின் The Hundred கிரிக்கெட் லீக்கில், புதிய கிரிக்கெட் அணியை வாங்கி உள்ளது.

 

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) The Hundred என்ற கிரிக்கெட் லீக்கை நடத்தி வருகிறது.

 

இந்த தொடரின், நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ்(Northern Superchargers) அணியை 100.5 மில்லியன் பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் ரூ.1,161கோடி) கையகப்படுத்தியுள்ளது.

 

 

இந்த கையகப்படுத்துதலில், யார்க்ஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப்பின் 51% பங்குகளும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) 49% பங்குகளும் அடங்கும்.

 

நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியின் அணித்தலைவராக ஹாரி புரூக்கும், பயிற்சியாளராக ஆண்ட்ரூ பிளின்டாஃப்பும் உள்ளனர்.

 

2024 நிதி ஆண்டில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியின் வருவாய் ரூ.22 கோடி உள்ள நிலையில், அதை விட 53 மடங்கு விலைக்கு வாங்கியுள்ளனர்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்