Paristamil Navigation Paristamil advert login

கமல்ஹாசனுக்காக எழுதிய கதையில் சல்மான் கான்?

கமல்ஹாசனுக்காக எழுதிய கதையில்  சல்மான் கான்?

6 ஆவணி 2025 புதன் 17:23 | பார்வைகள் : 166


‘விக்ரம்’  படத்துக்குப் பிறகு கமல்ஹாசன், மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிப்பதாக அறிவித்தார். ஆனால் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த படம் பற்றிய வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. அதையடுத்து இந்த படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. கமல்ஹாசன் அந்த படத்தில் தற்போது நடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து மகேஷ் நாராயணன் தற்போது மம்மூட்டி மோகன்லாலை வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த கதை கமல்ஹாசனுக்காக மகேஷ் நாராயணன் எழுதிய கதை என்று சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த கதையை சமீபத்தில் கேட்ட சல்மான் கான், அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த படத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படம் வரலாற்றுப் பின்னணியிலான கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்