வாட்ஸாப், டெலிகிராம் பயன்படுத்த தடை! - புதிய செயலியுடன் அமைச்சர்கள்!
3 ஆவணி 2025 ஞாயிறு 17:54 | பார்வைகள் : 2291
அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள், தங்களது அரச காரியங்களுக்காக WhatsApp மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் இந்த புதிய செயலி ஊடாகவே அரசகாரியங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அதன் பெயர் Tchap என தெரிவிக்கப்படுகிறது. ஜூலை 25 ஆம் திகதி அமைச்சர்களுக்கான அரச ஆணை அனுப்பப்பட்டது. அதில் இதனை பிரதமர் பிரான்சுவா பெய்ரூ அறிவித்துள்ளார்.
இந்த Tchap செயலியானது கடந்த 2018 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. ஆனால் அது உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை. இந்நிலையில், வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறித்த செயலியை பொதுமக்கள் பயன்படுத்த முடியாது எனவும், மிகவும் பாதுகாப்பான de bout en bout வசதியைக் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan